1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 30 நவம்பர் 2022 (20:09 IST)

தந்தை - மகன் கருத்துவேறுபாடா? இந்த கோயிலுக்கு சென்றால் மாற்றம் ஏற்படும்!

temple
பல வீடுகளில் தந்தை மகன் கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில் தந்தை மகன் கருத்து வேறுபாடு தீர்க்க சுவாமி மலை கோவிலுக்கு சென்றால் தந்தை மகன் உறவு சுமூகமாகிவிடும் என ஆன்மீகவாதிகள் கூறியுள்ளனர்
 
தந்தை-மகன் ஒற்றுமையை அதிகரிக்க கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை சென்றால் நல்ல மாற்றம் தெரியும் என்றும் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இந்த கோவிலுக்கு செல்பவர்கள் தந்தையுடன் இணக்கமாக இருப்பார்கள் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
 
மேலும் தந்தையுடன் கருத்துவேறுபாடு இருப்பவர்கள் சனிக்கிழமை தோறும் ராமாயணத்தில் உள்ள சுந்தரகாண்டம் பகுதியை படிக்க வேண்டும் என்றும் அவ்வாறு வாரந்தோறும் படித்து வந்தால் தந்தையுடன் இணக்கமான சூழல் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்தால் தந்தை மகன் உறவு வலுவாகும் என்றும் கூறப்படுகிறது. தந்தை மகன் உறவு என்பது மிகவும் புனிதமானது என்றும் அது நட்புடன் கூடிய ஒரு உறவு என்பதால் அந்த உறவில் விரிசல் விழுந்தால் வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது என்றும் குறிப்பிடத்தக்கது
 
எனவே மேற்கண்ட பரிகாரங்களை தந்தையுடன் கருத்துவேறுபாடு இருப்பவர்கள் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Mahendran