1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Diwali: Mantra to recite while lighting Yama Deepam !!

தீபாவளி: யம தீபம் ஏற்றும்போது சொல்லவேண்டிய மந்திரம் !!

Yama Deepam
தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றப்படிகிறது. யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.


மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு  வரும் முன்னோர்களுக்கு, மாஹாளய அமாவாசை அன்று திதி கொடுக்கப்படுகிறது. அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அத்தீபத்தை தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும். இது எப்போதும் தீபாவளிக்கு முதல் நாள் அன்று வரும்.

வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். அப்படி விளக்கேற்ற வீட்டில் வசதி இல்லா விட்டால் வீட்டிற்குள்ளும் யம தீபம் ஏற்றலாம். யம தீபம் தெற்கு திசை நோக்கி எரிய வேண்டும். யம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டி உதவுவது, அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.

மந்திரம்:

ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:

Edited by Sasikala
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
கேதார கௌரிவிரதத்தை கடைப்பிடித்ததால் உண்டான நன்மையை விளக்கும் புராணக்கதை என்ன...?