அனைத்து நலன்களையும் அருளும் கேதார கௌரி விரதம் !!
அனைத்து பூஜைகளுக்கும் முதன்மையானது, விநாயகர் பூஜை. மஞ்சளில் சிறு விநாயகர் பிடித்து, அதற்குப் பூஜை செய்ய வேண்டும். விநாயகர் பூஜை முடிந்ததும், பிரதான கேதார கௌரி விரத சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.
சங்கல்பம் என்பது ஒரு பூஜையை எங்கு, என்று, எந்த வேளையில், எதற்காகச் செய்கிறோம் என்பதைச் சொல்லி, அந்தக் காரண காரியங்கள் செவ்வனே நடக்க இறைவனைத் தொழுது கொள்வதாகும். பொதுவாக, எந்த விரதமானாலும் அது கல்வி, செல்வம், ஆயுள், ஆரோக்கியம், புத்ர, பௌத்ர பாக்கியம், வெற்றி ஆகியன வேண்டிக்கொள்வது வழக்கம்.
சங்கல்பம் செய்து கொண்ட பின்பு, கலசத்துக்குப் பூஜை செய்து, பின்பு ஆதித்யாதி நவக்கிரஹ தேவதை மற்றும் அஷ்ட திக் பாலகர்கள் மஹாவிஷ்ணு பிரம்மாவை வணங்க வேண்டும். பின்பு, பிரதான பூஜையான அம்பிகை மற்றும் சிவபெருமானை பூஜிக்கும் அஷ்டோத்திரங்களை வாசித்து அர்ச்சனை செய்ய வேண்டும். அதன்பின், இரண்டு கலசத்தில் சாத்தியிருக்கும் கயிற்றுக்கு பூஜை செய்ய வேண்டும். கயிற்றிலிருக்கும் 21 முடிச்சுகளுக்கும் கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.
மந்திரங்கள்:
சிவாய நம: ப்ரதமக்ரந்திம் பூஜயாமி
வாஹாய நம: த்விதீயக்ரந்திம் பூஜயாமி
மஹாதேவாய நம: த்ருதீயக்ரந்திம் பூஜயாமி
வ்ருஷபத்வஜாய நம: சதுர்த்தக்ரந்திம் பூஜயாமி
கௌரீசாய நம: பஞ்சமக்ரந்திம் பூஜயாமி
ருத்ராய நம: ஷஷ்டக்ரந்திம் பூஜயாமி
பசுபதயே நம: ஸப்தமக்ரந்திம் பூஜயாமி
பீமாய நம: அஷ்டமக்ரந்திம் பூஜயாமி
த்ரியம்பகாய நம: நவமக்ரந்திம் பூஜயாமி
நீலலோஹிதாய நம: தசமக்ரந்திம் பூஜயாமி
ஹராயே நம: ஏகாதசக்ரந்திம் பூஜயாமி
ஸ்மர ஹராய நம: த்வாதசக்ரந்திம் பூஜயாமி
பவாய நம: த்ரயோதசக்ரந்திம் பூஜயாமி
சம்பவே நம: சதுர்தசக்ரந்திம் பூஜயாமி
சர்வாய நம: பஞ்சதசக்ரந்திம் பூஜயாமி
ஸதாசிவாய நம: ஷோடசக்ரந்திம் பூஜயாமி
ஈச்வராய நம: ஸப்ததசக்ரந்திம் பூஜயாமி
உக்ராய நம: அஷ்டாதசக்ரந்திம் பூஜயாமி
ஸ்ரீகண்ட்டாய நம: ஏகோநவிம்சக்ரந்திம் பூஜயாமி
நீலகண்ட்டாய நம: விம்சதிதமக்ரந்திம் பூஜயாமி
கேதாரேச்வராய நம: ஏகவிம்சதிதமக்ரந்திம் பூஜயாமி
கேதாரேச்வராய நம: நாநாநாவித பரிமள புஷ்பாணி ஸமர்ப்பயாமி
21 நாள்கள் பூஜை செய்ததன் அடையாளமாக இடப்பட்ட 21 முடிச்சுகளுக்கும் பூஜை செய்து, பின் அந்தத் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பின், கலசத்துக்கு தூப தீபங்கள் காட்டி நைவேத்தியம் செய்து, கற்பூர ஆரத்திகாட்டி நமஸ்காரம் செய்ய வேண்டும். கேதார கௌரி விரதம், அனைத்து நலன்களையும் அருளும் விரதம். செல்வங்கள் அனைத்தும் சேர்வதோடு, அவை நிலைத்து நிற்கவும் செய்யும் அற்புத விரதம் இதுவாகும்.