வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஜூலை 2024 (18:57 IST)

அம்மனில் பலவகைகள்.. ஆடி மாதத்தில் எந்த அம்மனை வழிபட்டால் என்னென்ன பலன்கள்..!

Aadi month - Amman
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்ற நிலையில் அம்மனில் பலவகை இருப்பதால் எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்சனை தீரும் என்பதை தற்போது பார்ப்போம்.
 
 இருக்கன்குடி மாரியம்மன் வணங்கினால் கண் நோய் உள்ளவர்களுக்கு பிரச்சனை தீரும். சோழவந்தான் அருகே உள்ள மாரியம்மனை வணங்கினால் அம்மை நோய் மறைகிறது.
 
மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தேவி கருமாரியம்மன் வணங்கினால் வீட்டில் நல்லது நடக்கும். புதுக்கோட்டை அருகில் உள்ள முத்துமாரியம்மனை  வணங்கினால் தீராத நோய் தீரும்.
 
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தந்தி மாரியம்மனை வணங்கினால் மழை பெய்யும். ஊட்டியில் உள்ள மகா மாரியம்மன் மற்றும் மகாகாளி அம்மனை வணங்கினால் தோஷங்கள் நோய்கள் பில்லி சூனியம் விலகும்.
 
நாமக்கல் அருகே உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் வணங்கினால் குழந்தை பேறு கிடைக்கும். கோவையில் உள்ள தண்டு மாரியம்மனை வணங்கினால் தீராத நோய் தீரும். சமயபுரம் மாரியம்மன் வணங்கினால் பெண்களுக்கு தாலி வரம் கிடைக்கும். திருப்பூர் மாரியம்மனை வணங்கினால் குடும்பத்தில் நல்லது நடக்கும். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் வணங்கினால் வேண்டுதல் நிறைவேறும்
 
Edited by Mahendran