1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

திமுகவுடன் கூட்டணியா? தவெகவுடன் கூட்டணியா? இரண்டாம உடைகிறதா தமிழக காங்கிரஸ்?

திமுகவுடன் கூட்டணியா? தவெகவுடன் கூட்டணியா? இரண்டாம உடைகிறதா தமிழக காங்கிரஸ்?
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் மோதல் போக்கு, அக்கட்சி இரண்டாக உடையப்போகிறதா என்ற அச்சத்தை அதன் தொண்டர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. 
 
தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், வரும் தேர்தலில் 'ஆட்சியில் பங்கு' என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. இதற்கு திமுக தலைமை சாதகமான பதில் அளிக்காத நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்தால் என்ன என்ற கோணத்தில் ஆலோசித்து வருகிறது.
 
இருப்பினும், ப. சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவது தற்கொலைக்கு சமம் என கருதுகின்றனர். "திமுகவுடன் கூட்டணியா அல்லது தவெக-வா?" என்ற இந்த அதிகார போட்டி சத்தியமூர்த்தி பவனில் கோஷ்டி பூசலாக வெடித்துள்ளது. 
 
ஒருவேளை அகில இந்திய தலைமை விஜய்யுடன் கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டினால், திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் தலைவர்கள் பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கும் சூழல் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva