வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : சனி, 24 செப்டம்பர் 2022 (13:46 IST)

செல்வ வளம் தரும் சதுர்த்தி விரத வழிபாடு !!

Teipirai Chaturthi
ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை சதுர்த்தியில் விரதத்தை தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் புராணம் சொல்கின்றன.


புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும்.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்கி அவர்கள் கல்வியில் சிறக்க செய்யும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும்.

சனிக்கிழமை வரும் சங்கடஹரசதுர்த்தி நாளில் குழந்தைகள் பெயரில் விநாயகருக்கு அர்ச்சனை செய்து பென்சில், நோட்டுகள், உறவினர் அல்லாத குழந்தைகளுக்கு இனிப்பும் தானம் தந்தால் வீட்டு குழந்தைகளுக்கு கல்விச் செல்வம் தேடி வரும் மற்றும் சனி தோஷம் குறையும்.

குழந்தை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் சங்கட சதுர்த்தியன்று அரிசி சாதத்தை சமைத்து பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளையாக பாவித்து தூவினால் விநாயகரின் அருளால் பிள்ளை வரம் கிடைக்கும்.