முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்க நவகிரக வழிபாடு...!

Sasikala|
நவகிரகக் கோவில்கள் நவகிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவற்றிற்கான  சிறப்பு வழிபாட்டுத் தலங்கள் ஆகும். இப்பிறவில் ஏற்படும் இன்ப துன்பங்கள் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இறைவனின் ஆணைப்படி நவகிரகங்கள் வழங்குவதாக இந்து மதத்தில் கருதப்படுகிறது.

 
தாங்கள் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி இப்பிறவியில் இன்பம் பெற இந்த நவகிரக வழிபாட்டு தலங்களுக்கு சென்று  மக்கள் வழிபாடு மேற்கொள்கின்றனர். 
 
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நவக்கிரகக் கோவில்கள்:
 
சூரியன் - சூரியனார் கோவில், திருமங்கலக்குடி.
 
சந்திரன் - கைலாசநாதர் கோவில், திங்களுர்.
 
செவ்வாய் - வைத்தியநாத சுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரன் கோவில்.
 
புதன் - சுவேதாரண்யேஸ்வரர் கோவில், திருவெண்காடு.
 
குரு - ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திருஆலங்குடி.
 
சுக்கிரன் - அக்னீஸ்வரர் கோவில், கஞ்சனூர்.
 
சனி - தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருநள்ளாறு.
 
ராகு - நாகநாத சுவாமி திருக்கோவில், திருநாகேஸ்வரம்.
 
கேது - நாகநாதர் கோவில், கீழப்பெரும்பள்ளம். 
 
நவக்கிரக் கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தும் முன்பு நவகிரகங்களுக்கு சாப விமோசனம் அளித்த திருமங்கலக்குடியில் உள்ள மங்களாம்பிகை உடன்உறை பிராணநாதர் திருக்கோவில் சென்று வழிபாடு செய்வது நல்லது.


இதில் மேலும் படிக்கவும் :