செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2023 (12:46 IST)

ஆறு விதமான பலன்களை அளிக்கும் அறுபடை வீடு தரிசனம்!

Lord Murugan 1
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் ஒவ்வொரு திருத்தலமும் ஒவ்வொரு வகையான பலன்களை அளிக்க கூடியவை.



தமிழ் கடவுளும், தந்தைக்கு புத்தி சொன்ன தனயனுமான முதற் கடவுளாம் முருகபெருமானுக்கு தமிழகம் மட்டுமல்லாது மலேசியா வரை ஏராளமான கோவில்கள் உள்ளது. எனினும் முருகனின் பூரண அருளை பெற முருகபெருமானுக்கு உகந்த அறுபடை வீடுகளில் தரிசனம் செய்வது பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.

அறுபடை வீடுகளான பழநி, பழமுதிர்சோலை, திருத்தணி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருச்செந்தூர் ஆகியவற்றில் ஒவ்வொரு திருத்தலமும் ஒவ்வொரு வகையான பலன்களை தரக்கூடியவை. அறுபடை வீடுகளின் பின் கதையும், அவை தரும் பலாபலன்களையும் காண்போம்.

Lord Murugan 1


முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகபெருமான் தெய்வானையை திருமணம் செய்த தலமாகும். இங்கு சுப்பிரமணிய சுவாமியாக தெய்வானையுடன் காட்சி தரும் முருகபெருமானை மனமுருக வேண்டிணால் திருமண தோஷங்கள் நீங்கி விவாஹ பாக்கியம் கிட்டும்.

Lord Murugan 1


இரண்டாம் படை வீடு திருச்செந்தூர். இங்குதான் முருகபெருமான் பத்மசூரனை வதம் செய்து வெற்றியை ஈட்டிய பின் வந்தமர்ந்த இடம். சுப்பிரமணிய சுவாமியாக அருள்பாலிக்கும் முருகபெருமானை வணங்குவதுடன், இங்கு அளிக்கப்படும் பன்னீர் இலை விபூதியால் தீராத பிணிகளும் தீரும் என்பது ஐதீகம்.

Lord Murugan 1


மூன்றாவது படை வீடான பழநி மலைதான் முருகபெருமான் ஞானப்பழத்திற்காக ஈசனிடம் கோவித்து கோமணத்துடன் ஆண்டியாய் வந்து நின்ற இடம். ஆயுதம் ஏதுமின்றி கோவணாண்டியாய் வந்து சேர்ந்த இடமாதலால் தண்டாயுதபாணியாக காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் வணங்குவதால் சகல தோஷங்களும் நீங்கி ஐஸ்வர்யம் உண்டாகும்.

Lord Murugan 1


நான்காம் படை வீடான சுவாமிமலையில்தான் முருகபெருமான் தந்தையான ஈசனுக்கு ப்ரணவ மந்திரத்தை உபதேசம் செய்த ஸ்தலம் ஆகும். இங்குள்ள சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் மனமுருக வேண்டினால் கல்வியும், ஞானமும் பெருகும், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சியடையும்.

Lord Murugan 1


ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருகன் வள்ளியை மணந்த ஸ்தலமாகும். திருமணம், குழந்தைபேறு வேண்டுபவர்கள் இந்த ஸ்தலத்தில் வேண்டி வந்தால் முருகனின் அருளுடன் தீர்க்க ஆயுளும் கிட்டும்.

Lord Murugan 1


ஆறாவது படையான பழமுதிர்சோலை அருள்மிகு சோலைமலை முருகன் கோவில்தான் எளியோரை கீழ்மையாக நினைத்தல் தவறு என்று ஔவைக்கு முருகன் உணர்த்திய தலம். ஞானத்தின் ஸ்தலமாக விளக்கும் இந்த கோவிலில் வணங்குவது கல்வி, ஞானம் உண்டாக அருள்கிறது.

இந்த ஆறுபடை வீடுகளிலும் முருகபெருமானை நினைத்து மனமுருகி வேண்டுவோருக்கு வாழ்வில் அனைத்து வளங்களும், அருளும் கிடைக்கும்.

Edit by Prasanth.K