வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Updated : சனி, 25 மார்ச் 2023 (22:21 IST)

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் உத்திரவிழா நாளை தொடக்கம்!

ayyanar
அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் உத்திரவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள  மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்து நாடார்களுக்கு  சொந்தமான இக்கோவிலில் ஆண்டுதோறும், பங்குனி உத்திர திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு பங்குனி உத்திர விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இந்த தொடர்ந்து 10  நாட்கள் நடைபெற உள்ளது.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடக்கவுள்ளது. பின்னர் 5 மணி முதல் 6 மணிவரை சன்னதிக்கு முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடக்கும். அதன்பின்னர்,. 11 மணிக்கு அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு புஷ்ப அலங்காரத்துடன் உச்சி கால சிறப்பு பூஜையும் நடக்கவுள்ளது.

வரும் செவ்வாய்க்கிழமை பங்கு உத்திர திருவிழா நடக்க்வுள்ளது. எனவே காலை 10:30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், 2 மணிகு பக்தர்கள் சுவாமிக்கு நேமிசங்கள் செலுத்தி வழிபடவுள்ளானர். அதன்பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு கற்பக பொன்சப்பரத்தில் சுவாமி வீதி உலா வருகிறார்.