உங்கள் பணக் கஷ்டம் தீர்ந்து, நீங்கள் நிம்மதியாக வாழவேண்டுமா?

Sasikala|
கீழ் காணும் சித்தர் துதியினை தினமும் 9இன் மடங்குகள் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு  பூஜை அறையில் ஜபித்து வரவும். நிச்சயம் பலன் கிடைக்கும்.

 
சித்தர் துதி:
 
ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்தீசாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர் தேவாய நமக
ஓம் ராமலிங்க தேவாய நமக
 
மேலும் சில பரிகாரங்கள் மூலமும் பணக் கஷ்டம் தீர்ந்து நிம்மதியாக இருக்க வழி உண்டு. 
 
* காலை வேளையில் குளித்து முடித்தவுடன் சிறிது சர்க்கரை எடுத்து வீட்டு வாசல் வெளியே தூவி வரவும். இது சிறு பூச்சிகள்  மற்றும் எறும்புகள் உன்ன உணவாகும். இவைகள் உண்ண உண்ண உங்கள் கஷ்டங்கள் சிறிது சிறிதாக விலகுவது உங்கள் கண்  கூடாக தெரியும். இது எளிய மிக மிக மிக சக்தி வாய்ந்த பரிகாரம்.
 
* எவ்வளவு பெரிய கடன் சுமையால் பாதிக்க பட்டிருந்தாலும் காஞ்சிபுரத்தில் அமர்ந்து அருள் பாலித்துவரும் காமாட்ஷி அம்மனை, ஒரு வளர்பிறை சித்திரை நட்சத்திரத்தில் பட்டு புடவை சாற்றி வழிபடுவோர்க்கு, நிச்சயம் கடன் சுமையில் இருந்து  மீட்டு சகல கமுடன் மன நிறைவான வாழ்வினை தருவாள் என்பது கண்கூடாக கண்ட உண்மை.
 
* வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில்  கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும்.
 
* கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து  வாங்கவும். அந்த மாவு வீட்டில் உள்ளவரை பண பிரச்சனைகள் குறைந்து இருப்பதை அனுபவத்தில் காணலாம்.
 
* தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவும்.


இதில் மேலும் படிக்கவும் :