ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : திங்கள், 25 ஜூலை 2022 (16:55 IST)

ஆடி மாதத்தின் சிறப்புகளும் அற்புத பலன்களும் !!

Aadi month - Amman
அம்பாள் தவம் செய்த மாதம் என்பதால் ஆடி மாத செவ்வாய், வெள்ளி கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், ஞாயிற்று கிழமைகளில் கூழ் ஊற்றப்படும் நிகழ்வும் நடத்தப்படுகின்றன. இதனால்தான் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து படையல் செய்து வரப்படுகின்றது.


மாதம் முழுவதும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானதாகும். ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. இது முருகனுக்கு உகந்த தினம். முருகனை இந்த நாளில் வழிபாடு செய்வது நல்லது.

ஒவ்வொரு வருடமும் 3 முக்கியமான அமாவாசை வரும். அதில் முதலாவதாக ஆடி அமாவாசை வருகின்றது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாளாக விளங்குகின்றது. முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசீர்வாதம் பெற்றிடலாம். அன்னதானம் செய்தல் இந்நாளில் முக்கியத்துவம் வாய்ந்த செயல்களாகும்.

மாதங்கள் உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவைக் கொண்டுள்ளன. இதில் தஷ்ணாயணம் புண்ணிய காலம் ஆகும். இது ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாக உள்ளது.

ஆடி மாதத்தை சக்தி மாதம் என்று பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. ஜீவ ஆதார சக்தி அதிகமாக உள்ள முக்கிய மாதமாகவும் உள்ளது. இதனால், ஆடி மாதம் சக்தி நிறைந்த மாதமாகக் கருதப்படுகிறது.