வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Updated : சனி, 29 ஏப்ரல் 2023 (23:43 IST)

ஏழுமலையான் கோவிலில் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்கு 12 மணி நேரமாவதாக  தகவல் வெளியாகிறது.

இந்தியாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் திருப்பதி ஏழுமலையான்  கோவில் ஆகும்.  பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும்,  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

தற்போது,  கோடைவிடுமுறை என்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.  நேற்று மட்டும் 51,071 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இவர்களில் 27,1 பேர் தங்களின் முடியை காணிக்கை செலுத்தியுள்ளனர். பக்தர்கள்  காணிக்கை செலுத்தியது எண்ணப்பட்டது. அதில், ரூ.4.12 கோடி காணிக்கையாகக் கிடைத்துள்ளது.

வைகுண்டம் காப்ளக்ஸ்-ல் உள்ள அறைகள் பக்தர்களால் நிறைந்துள்ள நிலையில், 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.