ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சுற்றுலா
  3. மலை அரசி
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 16 ஏப்ரல் 2018 (14:00 IST)

கோவை குற்றாலம் (வீடியோ)

கோவையில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் குறிப்பிடத்தகும்படியான ஒன்று கோவை குற்றாலம் அருவி. அதன் வீடியோ இணைப்பை கண்டு மகிழுங்கள்.



கோவையில் இருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது கோவை குற்றாலம். இங்குள்ள அருவியில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர் மனதை கொல்லை கொள்ளும் பேரழகு மிக்கது.

கோவையில் இருந்து காருண்யா பல்கலைக் கழகம் வழியாக சாடி வயல் வரை அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து அரை மணி நேரம் நடந்தால் கோவை குற்றாலத்தை அடையலாம்.

அந்த வனப்பகுதி வனத் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. எழிலார்ந்த அந்தப் பகுதிக்குள் நுழைய கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது. வாரத்தில் திங்கள் கிழமை விடுமுறை.

கோவை நகரிலிருந்து இங்கு செல்ல குறிப்பிட எண்ணிக்கையிலான பேருந்துகளே உள்ளன. மாலை ஐந்து மணிக்கு மேல் இங்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே இந்த இடத்தைப் பார்வையிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நீர்வீழ்ச்சியையும் இதைச் சுற்றியுள்ள இடங்களையும் வனத்துறையினர் நிர்வகித்து வருகின்றனர். எனவே கோவை குற்றாலத்தைக் காண வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும்.

இளம் பெண்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர், இங்கு அதிகம் வருவதால் இப்பகுதிக்கு தமிழக அரசு பெண் காவலர்களுடன் கூடுதல் பாதுகாப்புக்கு வழிவகை செய்தால் பெண்கள் பயமின்றி இந்தப் பேரழகை கண்டுகழிக்கத் துணைபுரியும்.