வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By sivalingam
Last Modified: திங்கள், 27 மார்ச் 2017 (22:15 IST)

பெண்கள் படுத்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? இல்லையென்றால் உடனே பாருங்கள்! உபயோகமாக இருக்கும்

தற்காலிக உலகில் விஞ்ஞானிகள் ராக்கெட்டுக்களை அனுப்பி செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழலாமா? என்று ஒருபுறம் கண்டுபிடிப்பு நடத்தி வரும் நிலையில் இன்னொரு புறம் ஒருசிலர் பெண்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.



 


கடலின் ஆழத்தை கூட அறிந்துவிடலாம் ஆனால் பெண்ணின் மன ஆழத்தை அறிய முடியாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் பெண்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள் தற்போது பெண்கள் படுத்திருக்கும் பொசிஷனை வைத்து, அவர்களுக்கு எந்த மாதிரியான ஆண்களை பிடிக்கும் என்ற ஒரு ஆய்வை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வின் முடிவுகளை பார்ப்போமா!

1. நேராக படுத்து மார்பு அல்லது வயிற்றின் மீது கை வைத்து பெண்கள் தூங்கினால் அவர்கள் எளிமையான, தன்னடக்கமுள்ள பெண்களாக இருப்பார்களாம். இவர்களுக்கு வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டஆண்களை மிகவும் பிடிக்குமாம்

2. குப்புற படுத்து தூங்கும் பெண்கள் வெடிகுண்டே வெடித்தாலும் எழுந்திருக்க மாட்டார்கள். மிகவும் பொறுப்பற்ற பெண்களான இருக்கும் இவர்களுக்கு கூலான, ஜாலியான ஆண்களை பிடிக்குமாம்

3. வலதுபுறமாக கைவைத்து தூங்கும் பெண்கள் நிலையான மனநிலை உடையவர்கள். வாழ்வில் பெரிய மாற்றங்களை விரும்பாத இவர்கள் நன்றாக பேசும் திறமையுடையவர்கள்.  தலைமை பண்பு கொண்ட ஆண்களை இவர்களுக்கு பிடிக்கும்.

4. தலையணையில் கை வைத்து பெண்கள் தூங்கினால் அவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் சீரியஸானவர்கள். ஆனால் அதே நேரத்தில் இவர்கள் உண்மையான அன்பை தேடுபவர்கள். உண்மையான அன்புடன் இருக்கும் ஆண்களை இவர்களுக்கு பிடிக்கும்

5. தலையணையை பெண்கள் கட்டிப்பிடித்து தூங்கும்பெண்கள் மிகவும் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள். தங்களுக்காக அதிக நேரம் செலவிடும் ஆண்களை இந்த பெண்கள் விரும்புவார்கள்!

6. போர்வையால் உடல் முழுவதும் மூடிக்கொண்டு தூங்கும் பெண்கள் எளிமையை விரும்புபவர்கள். மேலும் ஹோம்லி கேர்ள்ஸ் என்று அழைக்கப்படும் குடும்ப பெண்களான இவர்களுக்கு எளிமையான குணம் கொண்ட ஆண்களை மிகவும் பிடிக்கும்.

7. கைகளை மடித்து தூங்கும் பெண்கள் குடும்பத்துடன் ஒன்றியிருப்பார்கள். தன் குடும்பத்துடன் இருப்பதை தான் வசதியாக உணருவார்கள். இவர்களுக்கு புத்திசாலியான ஆண்களை மிகவும் பிடிக்கும்.