1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

கண் இமை முடிகளின் வளர்ச்சியை அதிகரிக்க சில டிப்ஸ் !!

விட்டமின் சி விட்டமின் இ, மற்றும் விட்டமின் பி போன்ற உணவுகளை சாப்பிடுவது நல்லது. இவ்வாறான உணவுகளை சாப்பிட்டால் நமது கண்களுக்கு நல்ல ஆரோக்கியம் ஏற்பட்டு கண் இமை முடி நன்கு வளரும்.

இரவு தூங்கும் முன்பு கண் இமை முடியின் மீது நல்ல கற்றாழை ஜெல்லை தடவவும். கற்றாழையில் உள்ள தாது உப்புக்கள் மற்றம் விட்டமின் போன்றவை இமை முடியின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும், கண் இமை முடி வலிமையாக இருக்க உதவுகிறது.
 
தினமும் தூங்கச் செல்லும் முன்பு ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் இதில் ஏதேனும் ஒன்றை எடுத்து கண் இமை முடிகளில் தடவவும். இவ்வாறு செய்தால் கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.
 
கண்களை மூடிக் கொண்டு கண் இமைகளின் மேல் மென்மையாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதன் மூலம் கண்களில் இரத்த ஓட்டம் சீராகி இமை முடி நன்கு வளரும்.
 
கண்களில் இயற்கையான கண் மை பயன்படுத்துவது நல்லது. கண் இமை முடிகளை செயற்கையாக வளைக்கக் கூடாது. இரவு தூங்க செல்லும் முன்பு கண்களுக்கு வைக்கும் மையை கட்டாயம் நீக்கி தேங்காய் தடவி வரலாம்.