1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
  4. Some tips for maintaining skin using papaya face packs...!

பப்பாளி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி சருமத்தை பராமரிக்க சில குறிப்புகள்...!

பப்பாளி
பப்பாளி சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பப்பாளி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி சருமத்தை மெருகேற்ற உதவும் சில குறிப்புகளை பார்ப்போம்.

பப்பாளியில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. மேலும் இதில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும். 
 
பப்பாளி மற்றும் தேன்: குறிப்பு 1
 
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பப்பாளி மற்றும் தேன் சிறந்த தீர்வு. தேன் சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும். பப்பாளியின் விழுது முகத்தில் உள்ள துளைகளில் ஆழமாக சென்று சுத்தம் செய்கிறது.
 
பப்பாளியின் விழுது - கால் கப், தேன் - அரை தேக்கரண்டி, எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி. இவை மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்களில் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்தில் நான்கு நாட்கள் செய்து வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
 
பப்பாளி மற்றும் ஆரஞ்சு: குறிப்பு 2
 
பப்பாளி மற்றும் ஆரஞ்சு இரண்டையும் கலந்து பயன்படுத்துவதால் அதிகபடியான எண்ணெய் சுரப்பது குறைந்துவிடும். மேலும் முகத்தில் உள்ள கருமையை போக்க  வல்லது.
 
பப்பாளி விழுது - தேவையான அளவு, ஆரஞ்சு சாறு - 3 தேக்கரண்டி. ஒரு பௌலில் பப்பாளி விழுது தேவையான அளவு எடுத்து கொண்டு, அதில் 3 தேக்கரண்டி ஆரஞ்சு சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வரவும். இதனால் முகத்தில் எண்ணெய்  வழியாமல் இருக்கும்.
அடுத்த கட்டுரையில்
சீரகத்தை இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...!!