புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: திங்கள், 13 டிசம்பர் 2021 (21:14 IST)

சோர்வான கண்களுக்கு புத்துணர்ச்சி தரும் சில அழகு குறிப்புக்கள் !!

தினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது.

முகத்திற்கு பொலிவும், வசீகரமும் சேர்ப்பவை கண்கள். சிலருக்கு அந்த கண்களின் புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது. இதற்கு சுத்தமான விளக்கெண்ணெய்யை கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால், முடி அடர்த்தியாக வளரும்.
 
சோர்வான கண்களுக்கு, ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட், வட்டமாக வெட்டிய வெள்ளரித் துண்டு போன்றவற்றை கண்களின் மேல் வைத்துக்கொள்ளலாம்.
 
நன்றாகப் பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகளையோ அல்லது அதனுடன் கேரட் ஜூஸைக் கலந்தோ கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கரு வளையங்கள் மறையும்.
 
கண்களை கடிகார முட்கள் நகருவதுபோல் வட்ட வடிவத்தில் சுழலவிட வேண்டும். பின்னர் எதிர்புறமாக கண்களை சுழல செய்ய வேண்டும். அவ்வாறு ஐந்து முறை செய்து வர வேண்டும்.
 
உள்ளங்கைக்குள் கண்களை மூடி பயிற்சி பெறுவது கண் சோர்வு, கண் வலி பிரச்சினையை குறைக்கும். கண் பார்வை திறனையும் மெருகேற்றும். கைகளை உரசி வெதுவெதுப்பு தன்மைக்கு மாற்றிவிட்டு கண்களை மூடி அதன் மேல் சூடான கைகளை வைத்தபடி சில நிமிடங்கள் அமைதியாக இருக்க வேண்டும். பின்னர் கண்களை திறந்து மெல்ல மூடி 5 முறை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.