வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (17:39 IST)

பேன் பிரச்சினையை முற்றிலும் போக்க உதவும் எளிய வழிகள் !!

பேன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒருவர், தலையை அடிக்கடி சொறிந்து கொண்டிருப்பார். பேன் இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். மேலும் இரவுநேரங்களில் தூக்கமின்மைக்கு பேன்கள் கூட ஒரு காரணமாக இருக்க முடியும்.


பேன் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தால், நமக்கும் பேன் வரும் வாய்ப்பு அதிகம். அவர்கள் உடுத்தும் உடைகளை உடுத்தினாலோ, அவர்களின் படுக்கையில் படுத்தாலோ பேன் வரும் வாய்ப்பு உண்டு. தலையில் சொறி வரும்.

உச்சந்தலையில் எரிச்சலையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது. சீப்புகள், முடி தூரிகை போன்ற பொருட்களை பகிர்ந்து கொள்வதை நிறுத்துங்கள். முடிந்தவரை அடிக்கடி படுக்கை விரிப்புகளை மாற்றவும். துணிகளை வெந்நீரில் ஊற வைத்து கழுவவும், இதனால் பேன்களை அகற்றி, பேன்கள் பரவுவதை தடுக்க முடியும்.

தலை மற்றும் முடிக்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யை தடவவும். தேங்காய் எண்ணெய்யில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பேன்களை அழிக்க உதவும்.

சீத்தாப்பழ விதைகளைக் காயவைத்துப் பொடி செய்து சிறிதளவு எடுத்துச் சீயக்காயில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்துவந்தால் ஈறு, பேன் தொல்லை குறையும்.

வசம்பைத் தண்ணீர்விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊறவைக்க வேண்டும். பிறகு, தண்ணீரில் தலை முடியை நன்றாக அலசினால் பேன் தொல்லை குறையும்.