புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற ஃபேஸ் பேக்குகள் சிலவற்றை பார்ப்போம்..!!

அனைவருக்குமே ஒரே வகையான சருமம் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம். அவை எண்ணெய் பசையுள்ள சருமம், வறட்சியான சருமம், நார்மல் சருமம் போன்றவை. மேலும் இந்த ஒவ்வொரு வகையான சருமத்திற்கும், தனித்தனி ஃபேஸ் பேக்குகள்  உள்ளன. 
ஆனால் சிலரால் தமக்கு எந்த வகையான சருமம் உள்ளது என்று தெரியாது. எனவே அத்தகையவர்களுக்காக அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற பொதுவான சில ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி, சருமத்தை அழகாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளலாம்.
 
ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் சந்தனப் பொடி அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில்  தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாவதுடன், அழகாகவும், வறட்சியின்றிவும் இருக்கும். வேண்டுமேனில், முட்டையுடன்  சிறிது தேன் சேர்த்து கலந்தும் போடலாம்.
கடலை மாவில், தயிர், சிறிது தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி முகம் பொலிவோடு இருக்கும்.
 
அழகுப் பொருட்களில் ஒன்றான மஞ்சள் தூளை, தயிர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள  முகப்பருக்கள் மற்றும் கருமை நீங்கி, முகம் அழகாக காணப்படும்.
 
ரோஸ் வாட்டர் ஒரு நேச்சுரல் டோனர். இதனை அனைத்து வகையான சருமத்தினரும் பயமின்றி சருமத்திற்கு பயன்படுத்தலாம். அதிலும் சந்தன பவுடரில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, ஃபேஸ் பேக் போட்டால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, முகம்  பளிச்சென்று இருக்கும்.