கரும் புள்ளிகள் மறைய ஜாதிக்காயின் பயன்பாடுகள் குறித்து பார்ப்போம்...!!
ஜாதிக்காய் உஷ்ணத்தன்மை மிக்க ஒரு மூலிகை என்பதால் இது பெரும்பாலும் பசும்பாலில் கலந்தே மருந்தாக உட்கொள்ளப்படுகின்றன.
ஜாதிக்காய் முகப்பருவுக்கும் வறண்ட சருமத்துக்கும் எதிரி என்றே சொல்லலாம். இதை சரியான முறையில் பயன்படுத்தினால் அழகு குறிப்புக்கு பலன் கிடைக்கும். ஹார்மோன் பிரச்சனையால் முகப்பருவை சந்திப்பவர்கள் அதை சரிசெய்ய ஜாதிக்காய் பயன்படுத்தினால் போதும்.
சருமத்துக்கு தீங்கு செய்யும் பாக்டீரியைவை அழிக்க செய்கிறது. சரும பிரச்சனை இருந்தால் ஜாதிக்காயை முதலில் பயன்படித்தி பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.
சருமத்தில் கரும்புள்ளிகள், சாரும்ம பிரிச்சானை இருப்பவர்கள் ஜாதிக்காய் தூள் 1 டீஸ்பூன் அளவு எடுத்து அதில் எலுமிச்சைசாறு இரண்டு சொட்டு சேர்த்து, தயிர் கலந்து கெட்டியான பேஸ்ட் பதத்துக்கு குழைத்து முகம் முழுக்க தடவவும்.
10 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தமாக துடைத்து மாய்சுரைசர் பயன்படுத்தவும்.
இலவங்கப்பட்டை, ஜாதிக்காய் தூள், தேன் மூன்றையும் சம அளவு எடுத்து எலுமிச்சை சாறு சில துளி சேர்த்து நன்றாக கலக்கவும். இரவு தூங்குவதற்கு முன்பு கரும் புள்ளிகள் இருக்கும் இடத்தின் மீது தடவி விடவும். மறுநாள் காலை மிதமான நீரில் கழுவி எடுக்கவும். தொடர்ந்து செய்தால் கரும் புள்ளிகள் மறையக்கூடும்.
ஜாதிக்காய் தூள், தேன் இரண்டையும் சம அளவு கலந்து முகத்தில் பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து விடவும். இவை இரண்டுமே பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி பண்புகளை கொண்டிருப்பதால் அது சருமத்தை முகப்பருவிலிருந்து பாதுகாக்க செய்யும். எண்ணெய்ப் பசையை போக்கும்.