வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 21 ஜூன் 2022 (16:49 IST)

அக்குள் கருமையை இவ்வளவு எளிமையாக போக்க முடியுமா...?

Dark armpit
உருளைக்கிழங்கை அரைத்து அதனை தினமும் காலையில் அக்குளில் தடவி ஸ்கரப் செய்து பின் குளித்தால் கருமையான அக்குளில் இருந்து விடுபடலாம்.


எலுமி்சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால் எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்குளில் தேய்த்து ஊறவைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி அக்குள் வெள்ளையாவதோடு அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

கற்றாலையின் ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து சுமார் ஒரு மணிநேரம் ஊறவைக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் நிச்சயம் அக்குள் கருமை நீங்கும்.

இயற்கையாகவே மஞ்சள் மற்றும் தயிரில் ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே முகத்தில் உள்ள கருமையைப் போக்க மஞ்சளை தயிரில் கலந்து அக்குளில் தேய்த்து ஊறவத்து கழுவினால் அக்குள் கருமையை நிச்சயம் போக்கிவிடும்.

தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவவேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காயை அரைத்து அரை கப் சாறு எடுத்து அதில் சிறிது உருளைக்கிழங்கை அரைத்து கலந்து அக்குளில் தடவி சிறிதுநேரம் ஸ்கரப் செய்து 10-15 நிமிடம் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.

கடலைமாவு, பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் செய்து குளிக்கும் முன் அக்குளில் தடவி பத்து நிமிடம் ஊறவைத்து பின் குளித்தால் அக்குள் கருமை நீங்கிவிடும்.