புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முடி உதிர்வை தடுக்க உதவும் பிரியாணி இலை !!

பிரியாணி இலையில் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்பு போன்ற பல சத்துக்கள் இருப்பதால் நம்மை இளமையாகவே வைத்து  கொள்ள உதவுகிறது.

பிரியாணி இலை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்கும்.மேலும் இதய செயல்பாட்டை சீராக பராமரிக்க உதவும். அதனால் நீரிழிவு நோயாளிகள் இதை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
 
முடி உதிர்வை தடுக்க இந்த பிரியாணி இலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பிறகு இந்த நீர் ஆறியதும் அதை முடியில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
 
சரும எரிச்சலால் அவதி படுபவர்கள் இந்த நீரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். மேலும் இந்த பிரியாணி இலை பாம்பு  விஷத்தை முறிக்கும் தன்மை உடையது.
 
செரிமானம் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது. 
 
மலச்சிக்கல் மற்றும் குடலியக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு டீயில் பிரியாணி இலையை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் இந்த பிரச்சனைகள் விரைவில்  குணமாகும்.