முகத்தை க்ளென்சிங் செய்ய சில இயற்கை குறிப்புகள் !!

beauty tips
Sasikala|
முகத்தை க்ளென்சிங் செய்வதற்கு இரண்டு ஸ்பூன் தேனுடன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை காட்டன் கொண்டு முகத்தில் தடவி பின் துடைத்து எடுத்தால் போதும். முகத்தில் இருக்கும் அழுக்குகள் போன்றவை நீங்கி முகம் சுத்தமடையும். 

பார்லர் போகாமல் முகம் ஜொலிக்க, கடலை மாவு ஒரு டீஸ்பூன் அதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள்  ஆகியவற்றை கலந்து அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ள வேண்டும். இதனைக் கொண்டு பத்து நிமிடங்களுக்கு முகத்தை மசாஜ்  செய்தால் முகத்தில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் நீங்கி பொலிவடையும்.
 
அடிக்கடி முகத்தை கழுவிக் கொண்டே வாருங்கள். அது போல் முகத்தை துடைக்கும் பொழுது டவல் பயன்படுத்தி அழுத்தித் துடைக்க கூடாது. லேசாக ஒற்றி  எடுக்க வேண்டும். அடிக்கடி முகத்தை தொடக்கூடாது. இவற்றை கடை பிடித்தால் உங்களுடைய சருமம் மாசு மருவற்ற பிரகாசமாக ஜொலிக்கும்.
 
மேற்கூறிய இந்த டிப்ஸ்களை வாரம் ஒன்று என்பது போல் பயன்படுத்தி பார்த்தால் ஒரு சில வாரங்களில் நீங்களே எதிர்பாராத அளவிற்கு உங்களுடைய முகத்தில் பெரிய மாற்றங்களை உணரலாம். முகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 


இதில் மேலும் படிக்கவும் :