செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

கூந்தல் நன்கு நீளமாக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், மூலிகை ஷாம்புக்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் மூலிகை  ஷாம்புக்களான்து முடியை வலுவாக்கி, அதன் வளர்ச்சியை அதிகரிக்கும்.

மூலிகை ஷாம்புக்களை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானவை கூந்தல் உதிர்வது நின்றுவிடும். எனவே கூந்தல் உதிர்தல் அதிகம்  உள்ளவர்கள், வாரம் ஒரு முறை மூலிகை ஷாம்புக்களை பயன்படுத்தி முடியை அலசி வாருங்கள்.
 
கூந்தல் பொலிவிழந்து காணப்பட்டால், அதனை மூலிகை ஷாம்பு தடுத்து, கூந்தலின் பொலிவை அதிகரிக்கும்.
 
கூந்தல் வறட்சியடைந்து இருந்தால், அதனை சரிசெய்ய மூலியை ஷாம்புக்களைப் பயன்படுத்தினால், நிச்சயம் கூந்தலானது வறட்சியின்றி மென்மையாக இருக்கும்.
 
கூந்தல் வெடிப்பு இருந்தால், கூந்தலின் வளர்ச்சி மட்டுமின்றி, அழகும் பாதிக்கப்படும். ஆனால் மூலிகை ஷாம்புக்களை கூந்தலுக்கு பயன்படுத்தினால், கூந்தல் வெடிப்பானது நீங்கும்.
 
கூந்தல் அதிகப்படியான எண்ணெய் பசையுடன் இருந்தால், அதனை சரிசெய்ய மூலிகை ஷாம்புக்களை பயன்படுத்தினால், கூந்தலில் உள்ள அதிகப்படியான  எண்ணெய் பசையானது நீங்கிவிடும்.
 
பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், மூலிகை ஷாம்புக்களை பயன்படுத்தினால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.