1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By

ரெய்கி என்றால் என்ன? இதன் மூலம் நோயை குணப்படுத்த முடியுமா?

பரவலாக ரேக்கி மருத்துவம் என்று பேசப்படுவதை அனைவரும் அறிந்து இருப்பர். ரெய்கி என்பது ஜப்பானியர்களின் மிகப்பழமையானதொரு மருத்துவக் கலை. இந்த மகா பிரபஞ்சத்திற்குள்ளே நாம் ஒரு சிறிய் அணுவாக உறைந்து இருக்கிறோம்.
REI என்றால் பிரபஞ்சம் என்று பொருள். KI என்றால் உயிர்ச்சக்தி என்று பொருள். இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளது இந்த உயிர்ச்சக்தியே. பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள் தரும். பிரபஞ்சம் என்பது நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற ஐம்பூதங்களைக் குறிக்கும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து  உடல்களும் ஐம்பூதங்களால். ஆனவை. 
 
1. நிலம் – உடல், 2. நீர் – இரத்தம், 3. காற்று – உயிர்(பிராணவாயு), 4. நெருப்பு – சூடு (உடலின் மிதமான வெப்பம்), 5. ஆகாயம் – விந்து.
 
R – Rinse or clean - தூய்மைப் படுத்துதல்; ரேக்கி கற்றவர்கள், தான் ரேக்கி கலையைப் பயன்படுத்தும் முன்பு தன் உடல், மனம் ஆகிய இரு கருவிகளையும் சுத்தப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி நோயாளியும் இதே ஒத்த நிலையில் இருக்கச் செய்வது ஆகும்.
 
E – Energize or Activate - சக்தியூட்டுதல்: உலகில் உள்ள ஒவ்வொரு தனிமத்துள்ளும் மகத்தான பல சக்திகள் அமைந்துள்ளன. இந்த சக்திகளுக்கெல்லாம் ஆதார சக்திதான் ப்ரபஞ்சப் ப்ரணவ உயிர்ச்சக்தி. இந்தச் சக்தி இல்லையேல் உயிர்கள் இயங்க முடியாது. அப்படிப்பட்ட உயிர்ச்சக்தியைப்  பிரபஞ்சத்தில் இருந்து பெற்று, அதை மற்றவர்கள் மீது செலுத்தும் அருட்பணியே சக்தியூட்டல் என்பதாம்.
 
I – Immunize or Stabilize - தடைக்காப்பளித்து நலப்படுத்துதல்: ப்ரபஞ்சத்தில் இருந்தே சக்தியை எடுத்து நோய் எதிப்பாற்றலைப் பெருக்குதலாம்.
 
K – Knit or Unite- இணைத்தல்: எதிர்ப்பாற்றலை உருவாக்கிய பின் நோயைக் கண்டறிந்து நோயையும் அதற்குத் தேவையான ப்ரபஞ்ச சக்தியையும்  இணைத்தல்.
 
I – Insulate or protect - கவசமளித்தல்: பிணியின் தீவிரத்தைக் குறைத்தல் அதாவது நோயைக் குணப்படுத்துதல் (Healing). இவை ஒவ்வொன்றுக்கும் குறியீடுகள் உள்ளன. அவற்றை வரைந்து அதற்கான உச்சரிக்கும் சொற்களும் உள்ளன. இந்தக் குறியீடுகளும் மந்திரச் சொற்களும் சுமார் 147  உள்ளன.