திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

முதுகு வலியை ஏற்படுத்தக் கூடிய காரணங்கள் பற்றி அறிவோம்

எலும்பின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியம் சத்து தேவை. வயது அதிகமாக அதிகமாகக் கால்சியத்தின் அளவு குறைந்து எலும்பு மெலிந்துவிடும். இதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ (ஆஸ்டியோபோரோசிஸ்) என்று பெயர். இது கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தும்.

 
முதுகு வலிக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அடிப்படைக் காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று, இடம்விட்டு விலகுவது (Disc prolapse). அடுத்தது, முதுகு முள்ளெலும்புகளின் (Vertebrae) பின்புறமுள்ள அசையும்  மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது.
 
டிஸ்க் ப்ரொலாப்ஸ்:
 
முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் டிஸ்க் என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியாலோ தேய்ந்து விடும். அவ்வாறு 2 எலும்புகளிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி  வலியை உண்டு பண்ணும்.
 
ஆஸ்டியோபொரோஸிஸ்:
 
உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம்.  இதனால் எலும்புகள் அடர்த்தி குறைவாகி, வலுவிழந்து வலியும், எலும்பு மு றிவும் ஏற்படலாம்.
 
ஸ்பாண்டிலோசிஸ்:
 
வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளிடையே  உராய்வு, அழற்சி, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.
 
ஆர்த்ரைட்டிஸ்:
 
மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ்.
 
ஸ்பாண்டிலோலிஸ்தஸிஸ்:
 
முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ, புன்புறமோ விலகிவிடும். இதனாலும் முதுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இவை  பெரும்பாலும் 35 வயதை தாண்டியவர்களுக்கு ஏற்படுகிறது.