1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2024 (19:01 IST)

வெந்தயம் உணவில் சேர்ப்பாதல் ஏற்படும் நன்மைகள்..!

Fenugreek
வெந்தயம் உணவில் சேர்ப்பதால் ஏராளாமான நன்மைகள் மருத்துவர்கள் மட்டுமின்றி நமது முன்னோர்களும் கூறியுள்ளனர். வெந்தயம் அடிக்கடி உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்,
 
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
 
வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணத்தை சரிசெய்யவும் வெந்தயம் உதவுகிறது.
 
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
 
வெந்தயம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
 
நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 
வெந்தயம் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது.  இதனால், இதய நோய்களின் அபாயம் குறைகிறது.
 
 வெந்தயம் மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.  மாதவிடாய் வலி மற்றும் அதிகப்படியான இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு இது சிகிச்சையளிக்கிறது. அதேபோல் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது
 
மேலும் வெந்தயம் தலைமுடியை வளர்க்க உதவுகிறது. சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் வெந்தயம் உதவுகிறது.  வெந்தயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
 
 வெந்தயத்தை சாம்பார், ரசம், தோசை, இட்லி போன்ற உணவுகளில் சேர்க்கலாம். மேலும்  வெந்தயத்தை வறுத்து பொடி செய்து, தண்ணீருடன் கலந்து குடிக்கலாம்.  வெந்தயத்தை ஊற வைத்து, அதன் தண்ணீரை குடிக்கலாம்.
 
 கர்ப்பிணிப் பெண்கள் வெந்தயத்தை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  வெந்தயம் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். எனவே, வெந்தயத்தை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
 
Edited by Mahendran