வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 ஜூன் 2023 (19:14 IST)

சுக்கு சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

Sukku
சுக்கு என்பது நன் மருந்தாக விளங்கும் என்பதும் அவ்வப்போது சுக்கு சாப்பிட்டால் எந்தவித நோயும் அண்டாது என்றும் கூறப்படுவது உண்டு.
 
சுக்கு வாந்தியை நிறுத்தக்கூடியது என்றும் வாயுவை கட்டுப்படுத்த கூடியது என்றும் கொழுப்புச்சத்தை குறைக்கக்கூடியது என்றும் நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்றக்கூடிய தன்மை உடையது என்றும் கூறப்படுகிறது.
 
பூண்டுடன் சுக்கு சேர்த்து சாப்பிட்டால் வயிற்று நோய் குணமாகும் என்றும் சுக்கு பொடியோடு தேனும் எலுமிச்சை சாறு குழைத்து சாப்பிட்டால் உடல் பலம் தரும் என்றும் கூறப்படுகிறது. 
 
சுக்கு பொடியை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணம் அகலும் என்றும் சுக்குநீரை குழைத்து நெற்றியில் தடவினால் தலைவலி தணியும் என்றும் கூறப்படுகிறது. 
 
அதிரசம் போன்ற திண்பண்டங்களோடு சுக்குவை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்றும் எந்த வகையிலும் சுக்குவை சேர்த்து கொள்வதால் உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்பாடு அது என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
 
Edited by Mahendran