1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (04:45 IST)

பொது இடங்களில் தாய்ப்பால் ஊட்டுவது இழுக்கா?

பொது இடங்களில் தாய்ப்பாலூட்டுவதை சமூக இழுக்காக கருதக்கூடாது என்று இந்தியா ஹோம் ஹெல்த் கேர் மைய தலைவர் டாக்டர். அனிதா ஆரோக்கியசாமி கூறியுள்ளார்.
 

 
ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை உலக தாய்ப்பாலூட்டல் வாரம் அனுசரிக்கப்படுகிறது. ஒரு வார காலம் அனுசரிக்கப்படும் இதில், தாய்ப்பாலூட்டல், அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் புதிய தாய்மார்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு சவால்கள் குறித்து விளக்கமளிப்பது ஆகியவையும் இந்த ஒரு வார கால செயல்நடவடிக்கைகளில் அடங்கும்.
 
இந்தியாவில் பொது இடங்களில் தாய்ப்பாலூட்டுதல் ஏன் ஒரு கவலையளிக்கிற மற்றும் அச்சம் ஏற்படுத்துகிற செயல்பாடாக இருக்கிறது என்பது குறித்த கவலைகளை மக்கள் மனதிலிருந்து அகற்றுவதை தனது குறிக்கோளாகக் கொண்டு இந்தியா ஹோம் ஹெல்த் கேர் (ஐஎச்எச்சி) இந்த வார நிகழ்வை அனுசரிக்கிறது.
 
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஐஎச்எச்சி-ன் தலைவர் டாக்டர். அனிதா ஆரோக்கியசாமி பேசுகையில், “இந்தியாவில் மால்கள், பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற பொது மற்றும் திறந்த அமைவிடங்களில் தாய்ப்பாலூட்டுதலை ஒரு பிரச்சனைக்குரிய விஷயமாக கருதி கவலைப்படுவதால் தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் பெரும்பாலும் விலகி ஒதுங்கிவிடுகின்றனர்.
 
பொது இடங்களில் தாய்ப்பாலூட்டுவது என்பது வாழ்க்கையின் ஒரு வழக்கமான செயல்பாடாக, வழிமுறையாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தை பசியோடு இருப்பது குறித்ததாகும். தனது பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட ஒரு தாயை இச்செயல்பாடோடு இணைந்திருக்கிற எந்தவொரு சமூக இழுக்கும் தடுத்திடக்கூடாது.
 
வீட்டின் சுவர்களுக்கு வெளியே இருக்கும்போது கூட தனது குழந்தைக்கு பாலூட்டி பேணுகின்ற ஒவ்வொரு அன்னையையும் இந்தியா ஹோம் ஹெல்த் கேர் ஆதரிக்கிறது. இன்றைய உலகில் வெளியே செல்லும் போது பசியினால் அழுகிற குழந்தைக்கு பாலூட்டுவதை தவிர்ப்பதற்கு பதிலாக பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைத்து பாதுகாப்பதற்கு மறைப்புகளே அவசியப்படுகின்றன” என்று கூறியுள்ளார்.