தொடர்புடைய செய்திகள்
- சென்னை மெட்ரோ பணிகளுக்கு நாளை முதல் தடை.. மேயர் பிரியா அறிவிப்பு..!
- மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..
- வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
- ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
- கோவையில் டெங்கு காய்ச்சல் பரவும் விகிதம் அதிகரிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை
மழையில் நனைந்தாலும் சளி பிடிக்காமல் தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்..!
சாதாரண சளிக்கு வைரஸ்களே காரணம் என்றாலும், மழையின் குளிர்ச்சியால் உடல் வெப்பநிலை குறைந்து, நோய் எதிர்ப்புச் சக்தி பலவீனமடையும்போது வைரஸ் தாக்குதல் எளிதாகிறது என்று அறிவியல் கூறுகிறது.
சளி பிடிக்காமல் இருக்கப் பின்பற்ற வேண்டிய எளிய வழிகள்:
மழையில் சிக்கிக்கொண்டால், ஈரத்தை உறிஞ்சும் பருத்தி ஆடைகளை தவிர்த்து, விரைவாக காயக்கூடிய செயற்கை இழைகள் கொண்ட ஆடைகளை அணியுங்கள். இது உடல் வெப்ப இழப்பை கட்டுப்படுத்தும்.
மெதுவாக நடப்பதைவிட, லேசாக ஓடுவதன் மூலம் அல்லது வேகமாக நடப்பதன் மூலம் தசைகள் உள் வெப்பத்தை உற்பத்தி செய்து, குளிர்ச்சியை எதிர்த்து போராட உதவுகின்றன.
வீடு திரும்பியவுடன் உடனடியாக ஈரமான உடைகள், குறிப்பாக சாக்ஸ், காலணிகளை நீக்கிவிடுங்கள். தலை மற்றும் கால்களை நன்றாகத் துடைக்கவும்.
உடலின் உள் வெப்பநிலையை சீராக்க, சுக்கு காபி அல்லது மிளகு ரசம் போன்ற சூடான பானம்/உணவை உடனடியாக உட்கொள்ளுங்கள்.
மழையில் நனைவது பற்றி கவலைப்படாமல், உடல் வெப்பநிலை குறையாமல் பாதுகாப்பதே சளி பிடிக்காமல் இருப்பதற்கான அடிப்படை விதியாகும்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
