வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

மழை மற்றும் பனி காலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.....

மழை மற்றும் பனிக்காலத்தில் சில வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம், வரட்சியான தொண்டை, வயிறு சம்பந்தமான பிரச்னைகள் உண்டாக்கக்கூடும். குழந்தைகளுக்கு தேர்வுக் காலமும் வருவதால், உடல் தொந்தரவும் செர்ந்துகொண்டு குழந்தைகளைப் பயமுறுத்தும். எனவே, இயற்கையான உணவுகளை எடுத்துக்கொண்டால், நோய்க் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலைப் பெறலாம்.

 
குளிர்தானே என்று அலட்சியமாக எப்போதும்போல இருக்கக் கூடாது. சர்க்கரை, கொழுப்பு இருக்கும் உணவுகளைத் தவிர்க்கவும். ஃப்ரிட்ஜில் அதிக நாட்கள் வைத்திருந்த குளிர்பானங்களைக் கட்டாயம் தவிர்க்கவும்.
 
தினமும் காய்ச்சிய நீரையே பருக வேண்டும். சளி, காயச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி குணமடைந்த பின்னர் அனுப்ப வேண்டும்.
 
சமச்சீரான உணவு எடுத்துக்கொள்ளவும். ஐஸ்கிரீம், சாக்லேட் கொடுக்க வேண்டாம். குளிரான உணவுப் பொருட்களை  அப்படியே சாப்பிஉவதை தவிர்க்கவும்.
 
குளிர் அதிகமாக இருக்கும்போது, வெளியிடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள். காற்றில் உள்ள தூசு, தும்மல், தலைவலியை உண்டாக்கும்.
 
மழை மற்றும் பனி நேரத்தில் குழந்தைகளை வெளியே கூட்டிப் போகவேண்டியதிருந்தால், மாஸ்க், கையுறை, காலுறை, தலைக்கவசம், ஸ்வெட்டர் அணிந்துகொண்டுதான் போக வேண்டும். நீண்டதூரப் பயணங்களைத் தவிர்க்கலாம்.
 
உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்கக் கூடாது. ஏதாவது ஒரு உடற் பயிற்சியை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். காலையில் வாக்கிங் கூட்டிப்போவது நல்லது. இதனால், சுத்தமான காற்றும் சூரிய வெளிச்சமும் கிடைக்கும்.
 
வெளியில் செல்லும்போது, வெந்நீர் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்துச்செல்லவும். கொசுக் கடியிலிருந்து தப்பிக்க, மாலை நேரத்தில் வீட்டின் கதவு, ஜன்னல்களை மூடிவைக்கவும்.
  
வீட்டைச் சுற்றிய பகுதிகளில், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும். டயர்,கொட்டாங்கச்சியை வீட்டின் அருகில் போடாதீர்கள். கொசு கடிக்காமலிருக்க உதவும் வலை மற்றும் மருந்துகளைப் பயன்படுத்தி, குளிர்காலத்தின் தொந்தரவில் இருந்து குழந்தைகளைக் காக்கவும்.
 
சூடான உணவு வகைகளையே சாப்பிட வேண்டும். அதிகமாக மழை பெய்யும்போது ஸ்வெட்டர், குளிர் தடுக்கும் சாதனங்களை பயன்படுத்தலாம். கொசுக்கடியைத் தடுக்க உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.