இதயத்தை பாதுகாக்கும் உணவு முறைகள்
நாம்முடைய உணவை சத்துள்ளதாகவும், ஆரோக்கிய உணவாகவும் இருந்தால் தான் இதயத்தை பாதுகாக்க முடியும்.
1. ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், மாம்பழத்தை உண்டு வந்தால் இரத்த அழுத்த நோய் சரியாகும்.
2. அகத்தி கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது.
3. இதய வலி குணமாக, துளசிவிதை 100 கிராம், பன்னீர் 125 கிராம், சர்க்கரை 25 கிராம் ஒன்றாக கலக்கி இரண்டு வேளை சாப்பிட குணமாகும்.
4. திராட்சை பழத்தை வெந்நீரில் ஊற வைத்து சாறு எடுத்து சம அளவு துளசிச்சாறு எடுத்து உட்கொள்ள சிறப்பான குணம் தெரியும்.
5. ரத்த கொதிப்பு குணமாக, நெல்லிப் பொடியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சரியாகும்.
6. இலந்தை பழம் சாப்பிட்டு வர, நெஞ்சுவலி உள்லவர்கள் குணம் பெறலாம்.
7. தினசரி ஒரு பேரிக்காய் சாப்பிட, இதய படபடப்பு நீங்கும்.
8. தினம் ஒரு கப் தயிர் சாப்பிட, இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு நீக்கப்படுகிறது.
9. வெந்தயத்தை வேகவைத்து தேன்விட்டு கடைந்து உட்கொள்ள மார்புவலி குணமாகும்.
10. மாதுளம் பழரசம், காய்ச்சல் நேரத்தில் சாப்பிடலாம். ஈரல் மற்றும் இதயம் வலுவடையும்.