தினமும் காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!
தினமும் காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் ஏராளமான பலன்கள் உண்டு. அவை என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.
பாதாம் வைட்டமின் E, B6, ரிபோஃப்ளேவின், தயமின், நியாசின், ஃபோலேட் போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செம்பு, இரும்பு போன்ற தாதுக்களை கொண்டுள்ளது.
ஊறவைத்த பாதாம் நார்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும்.
பாதாமில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் உங்களை நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்க உதவும். இது எடை இழப்புக்கு உதவும்.
பாதாமில் உள்ள நல்ல கொழுப்புகள் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பாதாமில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
பாதாமில் உள்ள வைட்டமின் E மற்றும் B6 மூளை செயல்பாட்டை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்கும்.
பாதாமில் உள்ள வைட்டமின் E சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
பாதாமில் உள்ள வைட்டமின் E மற்றும் B6 முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
பாதாம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். பாதாம் எலும்புகளை வலுப்படுத்தும். பாதாம் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இருப்பினும் பாதாமை தினமும் சாப்பிடுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது.
Edited by Mahendran