திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 7 ஜூன் 2023 (19:19 IST)

வெண்டைக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

Ladies finger
பொதுவாக வெண்டைக்காய் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடாத ஒரு காய்கறி என்பதும் ஆனால் வெண்டைக்காயில் தான் அதிக சத்துக்கள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அன்றாட உணவில் கண்டிப்பாக சேர்க்க வேண்டிய காய்கறிகளில் ஒன்று வெண்டைக்காய் என்பதும் வெண்டைக்காய் உண்பதால் என்னென்ன நன்மைகள் என்பதை தற்போது பார்ப்போம். 
 
வெண்டைக்காய் சாப்பிட்டால் புத்தி கூர்மை அதிகமாகும் என்றும் எந்த காரியத்தையும் முடிக்கும் தெளிவான அணுகுமுறை நமக்கு கிடைக்கும் என்றும் ஆய்வு குறிப்புகள் கூறுகின்றன.
 
 கர்ப்பிணி பெண்களுக்கு வெண்டைக்காய் மிகவும் உகந்தது என்றும் வெண்டைக்காயில் உள்ள மாவுச்சத்து கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
இதயத்துடிப்பை சீராக வெண்டைக்காய் மிகவும் உதவி செய்கிறது என்றும் இதன் மருத்துவ குணங்கள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு குடல் புண்ணையும் ஆற்றும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஞாபகம் மறதி நோய் ஏற்படுவது வெண்டைக்காய் தொடர்ந்து சாப்பிடுவதால் மறையும் என்றும் மூளை செல்களின் வளர்ச்சியை தூண்ட வைக்கும் சக்தி வெண்டைக்காய்க்கு உண்டு என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran