1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 மார்ச் 2024 (21:54 IST)

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை – சென்னை அறிமுகம் செய்யும் ரீலெக்ஸ் ஸ்மைல் புரோ: கிட்டப்பார்வைக்கு மேம்பட்ட சிகிச்சை செயல்முறை!

Agarwal
  • கண்ணின் திறனை (பவர்) சரிசெய்யும் தானியக்க லேசர் கணக்கீடுகள் செயற்கை நுண்ணறிவின் மூலம் முழுமையாக இயக்கப்படும் ஸ்மைல் புரோ – ல் இடம்பெற்றுள்ளன. உலகளவில் 8 மில்லியனுக்கும் அதிகமான கண்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் அடிப்படையில் இதன் படிமுறைத் தீர்வு அமைந்திருக்கிறது. 
  • ஸ்மைல் புரோ செயல்முறையில் கண்ணிலிருந்து ஒரு திசு (வண்ணப்படல வில்லை என அழைக்கப்படும்)  எடுக்கப்படுகிறது மற்றும் கருவிழி மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது.  இதன்மூலம் விழித்திரைக்குள் சரியாக  ஒளி குவியம் செய்யப்படுவதை சாத்தியமாக்குகிறது.
 
சென்னை: மார்ச் 06, 2024:  உலகின் முதல் மற்றும் ஒரே ரோபோட்டிக் முறையிலான லேசர் அறுவைசிகிச்சையான ரீலெக்ஸ் ஸ்மைல் புரோ என்பதனை டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அறிமுகம் செய்திருக்கிறது.  சிறிய கீறலின் மூலம் வண்ணப்படல வில்லையை அகற்றும் இந்த மிகத்துல்லியமான, மிகக்குறைவான ஊடுருவல் கொண்ட மருத்துவ செயல்முறையானது, 10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்திற்குள் மயோப்பியா எனப்படும் கிட்டப்பார்வையை சரிசெய்கிறது. 

அப்போலோ மருத்துவமனையின் பிரபல இதயவியல் அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர். தீரஜ் ரெட்டி, இதன் தொடக்கவிழா நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.  டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் செயலாக்க இயக்குனரும், தலைமை மருத்துவ அதிகாரியுமான டாக்டர். அஸ்வின் அகர்வால், மருத்துவ சேவைகளுக்கான மண்டலத் தலைவர் டாக்டர். எஸ். சௌந்தரி மற்றும் மருத்துவ சேவைகளுக்கான மண்டலத் தலைவரும், முதுநிலை ஒளிவிலகல் அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர். ரம்யா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  

சென்னை மாநகரில் ரீலெக்ஸ் ஸ்மைல் செயல்முறையை அறிமுகம் செய்வதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு, பாராட்டிய அப்போலோ மருத்துவமனையின் பிரபல இதயவியல் அறுவைசிகிச்சை நிபுணரும், நடிகருமான டாக்டர். தீரஜ் ரெட்டி, “சென்னையில் ரீலெக்ஸ் ஸ்மைல் புரோ மருத்துவ செயல்முறை தொடங்கப்பட்டிருப்பது, நமது சுகாதார செயல்தளத்தில் பெருமைப்படக்கூடிய ஒரு சிறப்பான சாதனையாக கண் பராமரிப்பில் மிக சமீபத்திய மேம்பாடுகளும், முன்னேற்றங்களும் சமூகத்தினர் பயன்பெறும் வகையில் கிடைக்கப்பெறுவதை இந்த நவீன தொழில்நுட்பம் உறுதி செய்கிறது.  இதன்மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.” என்று கூறினார்.

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் செயலாக்க இயக்குனரும், தலைமை மருத்துவ அதிகாரியுமான டாக்டர். அஸ்வின் அகர்வால், ஸ்மைல் செயல்முறையின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கையில், “கிட்டப்பார்வைக்கு சிகிச்சையளிப்பதில் ரீலெக்ஸ் ஸ்மைல் ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாகும்.  லேசரின் மூலம் பார்வைத்திறன் குறைபாட்டை சரிசெய்யும் இந்த நவீன உத்தி, கடந்த ஆண்டில் தான் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது.  சென்னையில், இந்த மேம்பட்ட சிகிச்சைமுறை கிடைக்குமாறு நாங்கள் செய்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.  இந்த மருத்துவ செயல்முறையை செய்து முடிப்பதற்கு ஒரு கண்ணுக்கு 10 நொடிகளுக்கும் குறைவான நேரமே எடுக்கும் என்பதால், உலகளவில் மிக வேகமான கண் லேசர் கருவியாக இது இருக்கிறது,  மிக மிக குறைவான ஊடுருவலுடன் கிட்டப்பார்வையை சரிசெய்யும் சிகிச்சையாகவும் திகழும் இச்செயல்முறை, மிக வேகமாக குணம்பெற்று இயல்புநிலைக்கு வருவதையும் உறுதி செய்கிறது.

கண்ணின் திறனை (பவர்) சரிசெய்யும் தானியக்க லேசர் கணக்கீடுகள் செயற்கை நுண்ணறிவின் மூலம் முழுமையாக இயக்கப்படும் ஸ்மைல் புரோ – ல் இடம்பெற்றுள்ளன. உலகளவில் 8 மில்லியனுக்கும் அதிகமான கண்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் அடிப்படையில் இதன் படிமுறைத் தீர்வு (அல்கோரிதம்) அமைந்திருக்கிறது. மிக விரைவாக பார்வையை திரும்பப்பெறும் திறனை நோயாளிகளுக்கு வழங்கும் இதன் செயல்பாட்டிற்காகவும் மற்றும் உலர்கண் நோய்க்குறிக்கான இடர்வாய்ப்பு மிகவும் குறைக்கப்படுவதற்காகவும் ஸ்மைல் மருத்துவ உலகில் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.  வேறுபிற லேசர் முறையிலான கண் அறுவைசிகிச்சை செயல்முறைகளோடு ஒப்பிடுகையில், நோயாளிகள் அவர்களது வழக்கமான வாழ்க்கை செயல்பாடுகளை மிக விரைவாகவே தொடங்க இச்சிகிச்சை செயல்முறை அனுமதிக்கிறது.”

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் ரிஃப்ராக்டிவ்  & கார்னியா ஃபவுண்டேஷனின் இயக்குனர் டாக்டர். சூசன் ஜேக்கப் இச்சிகிச்சை செயல்முறை குறித்துப் பேசுகையில், “கருவிழி படலத்தில் ஒரு சிறிய, துல்லியமான கீறலை செய்வதற்கு மிக நவீன, ஃபெம்டோசெகண்டு லேசர் ஸ்மைல் – ல் இடம்பெற்றிருக்கிறது.  இந்த மிகச்சிறிய திறப்பின் வழியாக கருவிழி படலத்தின் உட்புற அடுக்குகளிலிருந்து ஒரு மெல்லிய வட்டு, வடிவிலான திசு வெளியே எடுக்கப்படுகிறது.  இது, கருவிழிப்படலத்தை மறுவடிவமைப்பு செய்து விழித்திரைக்குள் சரியாக ஒளி குவியம் ஏற்பட அனுமதிக்கிறது; இதன் மூலமாக கிட்டப்பார்வை சரிசெய்யப்படுகிறது.  மிக மிக குறைவான ஊடுருவல் தன்மை என்பதே ஸ்மைல் லேசர் கண் அறுவைசிகிச்சையின் தனித்துவமான அம்சங்களுள் ஒன்று.  இந்த சிறிய கீறல் (வழக்கமான லாசிக் அறுவைசிகிச்சையில் உள்ள 20 மி.மீ. என்பதுடன் ஒப்பிடுகையில் வெறும் 2 மி.மீ. மட்டுமே), கருவிழிப்படலத்தின் மேற்பரப்பில் ஏற்படக்கூடிய சீர்குலைவை குறைக்கிறது;

இதனால், செயல்முறையின்போது குறைவான அசௌகரியம் ஏற்படுவதும், விரைவான காலத்திற்குள் இயல்புநிலைக்குத் திரும்புவதும் உறுதிசெய்யப்படுகிறது.  அதைப்போலவே, லாசிக் சிகிச்சையில் 300 + கோண வட்ட வடிவிலான மடிப்புப்பட்டை கீறல் உருவாக்கப்படும் நிலையில், ஸ்மைல் – ல் அத்தகைய மடிப்புப் பட்டை எதையும் உருவாக்க வேண்டியதில்லை.  ஆகவே, இந்த மடிப்புப்பட்டையோடு தொடர்புடைய சிக்கல்கள் ஸ்மைலில் ஏற்படுவதில்லை.  அதைவிட முக்கியமாக, திரவங்கள் சுரப்பு அமைப்பில் இச்செயல்முறை இடையூறு செய்வதில்லை என்பதால், ஸ்மைல் – ல் உலர்கண் பிரச்சனைக்கான ஆபத்து இருக்காது.”  என்று கூறினார்.

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் மருத்துவ சேவைகளுக்கான மண்டலத் தலைவரும், முதுநிலை ஒளிவிலகல் அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர். ரம்யா நோயாளிகளுக்கு இந்த புதிய சிகிச்சை செயல்முறையின் பொருத்தமுடைமை குறித்துப் பேசுகையில், “உலகின் முதன்முதல் லேசர் முறையிலான பார்வைக் குறைபாட்டை சரிசெய்யும் செயல்முறையான ஸ்மைல் புரோ, ரோபோ அடிப்படையிலானது, மடிப்புப்பட்டை இல்லாதது, மிக மிக குறைவான ஊடுருவலுடன், மிருதுவான மற்றும் முற்றிலும் வலி இல்லாத சிகிச்சையை வழங்கும் திறன்  கொண்டது,  அதிக அளவிலான கிட்டப்பார்வை பாதிப்புள்ளவர்கள் உட்பட, பல நோயாளிகளுக்கும் இது பொருத்தமானது.  லேசர் முறையில் பார்வைத்திறனை சரிசெய்யும் சிகிச்சை மூலம் பலனடையும் நபர்களின் அடித்தளத்தை இது பெருமளவு விரிவாக்குகிறது. குறைந்தது ஒரு ஆண்டுக்கு தொடர்ந்து கண் கண்ணாடியை அணிவதற்கான பரிந்துரைப்புடன், பொருத்தமான கருவிழி அமைப்பியலை கொண்டிருக்கும் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள நபர்கள், இந்த நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி பலனடையலாம். 

இராணுவம், கடற்படை, விமானப்படை அல்லது காவல்துறை, விளையாட்டு வீரர்கள் போன்ற தொழில்முறை தேவைப்பாடுகள் உள்ளவர்களுக்கும் மற்றும் குழந்தைப்பருவ பிரிவில் ஒளிவிலகளுக்கான அறுவைசிகிச்சை தேவைப்படுபவர்கள் மெல்லிய கருவிழிகளை கொண்டிருக்கின்ற அல்லது கான்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்த இயலாதவர்கள் ஆகியோருக்கும் இந்த சிகிச்சை செயல்முறை பொருத்தமானது.  நடுக்கம் உள்ள அல்லது விழிநிலையாமை கண்கள் உள்ளவர்களுக்கான, ஒளிவிலகலுக்கான அறுவைசிகிச்சையிலும் மற்றும் தழும்புகள் விழுந்த கருவிழிகளுக்கான ஒளிவிலகல் அறுவைசிகிச்சையிலும் இந்த செயல்முறையில் நல்ல பலன் கிடைத்திருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.  ஸ்மைல் அவர்களுக்கு சரியான சிகிச்சை முறையாக இருப்பதை உறுதி செய்ய எமது நோயாளிகளின் தனித்துவமான தேவைகள், தகுதித்திறன் மற்றும் குறிப்பான ஒளிவிலகல் பிழை ஆகியவற்றை மதிப்பிட ஒரு முழுமையான பரிசோதனையையும், மதிப்பாய்வையும் நாங்கள் செய்கிறோம்.” என்று  கூறினார்.