1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (15:56 IST)

வெண்ணெய் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்தா...?

வெண்ணெய் ஆரோக்கியமற்றது என்று கூற முடியாது. அதே நேரம் அளவாக எடுத்து கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. 

 
வெண்ணெய்யை உட்கொள்வதால் இதில் நிறைந்துள்ள கொழுப்புக்களால் விரைவில் கொழுகொழுவென்று குண்டாகிவிடுவோம் என்ற பயம் உள்ளது. ஆனால் உண்மையை சொல்ல  வேண்டுமானால், அக்காலத்தில் நம் முன்னோர்கள் வெண்ணெய்யைத் தான் பெரும்பாலும் பயன்படுத்தினார்கள்.
 
ஆகவே வெண்ணெய் ஆரோக்கியமற்றது என்று கூற முடியாது. அதே நேரம் அளவாக எடுத்து கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. வெண்ணெயில் கலோரிகள் அதிகம் உள்ளது. ஆகவே இதனை அளவாக சாப்பிட்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். வெண்ணெய்யில் லெசிதின் என்னும் பொருள் உள்ளது.
 
வெண்ணெய் சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பான். எனவே இவற்றை உட்கொள்வதால், அது உடலில் ஏற்பட்டுள்ள சிறு நோய்த்தொற்றுகளை தடுக்கும். வெண்ணெய் சாப்பிடுவது, நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது. ஏனெனில் இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக செயல்பட வழிவகுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயநோய், உடல் பருமன் இல்லாமல் இருந்தால் ஓரளவு எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்கள், வெண்ணெய் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. வெண்ணெய்யில் உள்ள கலோரிகள் எளிதில் கரையாது.

மேலும் சர்க்கரை நோயாளிகள், இதயம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வெண்ணெயை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடலில் கொழுப்பின் அளவும், சக்தியை அதிகரிக்கச் செய்யும். 
 
உடல் எடை அதிகமாக உள்ள குழந்தைகளுக்கு வெண்ணெய் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள கொழுப்புச் சத்து மேலும் எடையைக் கூட்டிவிடும்.