1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 14 மார்ச் 2016 (13:07 IST)

தூக்கமின்மைக்கான காரணங்களும் தீர்வுகளும்

தூக்கமின்மைக்கான காரணங்களும் தீர்வுகளும்

இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை என்பது இப்போது சர்வ சாதாரணமாக பரவி வரும் பிரச்சனை. வயது வித்தியாசமின்றி அனைவரும் தவிப்பது தூக்கத்திற்காகவும் தான்!


 
 
நோய் ஏற்பட காரணம்:
 
சராசரியாக 8 மணிநேரம் ஆழ்ந்த நித்திரை அவசியம் தேவை. தேவைக்கு அதிகமாக தூங்குவதும் நோய்தான். தேவைக்கு குறைவாக தூங்குவதும் நோய்தான். எந்த ஒரு தூக்கமாக இருந்தாலும் தூங்கி எழுந்தவுடன் நமக்கு சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சி ஏற்பட வேண்டும்! சோர்வு ஏற்படுமாயின் அது நோய்.
 
அதிக நேரம் கழித்து தூங்குவதும், விடிந்தும் அதிக நேரம் எழிந்திருக்காமல் தூங்கிக் கொண்டே இருப்பதும் நோய்க்கான காரணங்கள்! அறிகுறி என்றும் சொல்லலாம்! மாலை 6 மணிக்கே தூங்கச் செல்வதும் நன்றன்று.
 
யாருக்கெல்லாம் இந்த நோய் வரும்:
 
இந்த பரபரப்பான உலக வாழ்க்கையில் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவர் ஏராளம். இது யாரைத்தான் தாக்கும் என்று பார்த்தால் 

1. மன உளைச்சல்
2. உடலுழைப்பின்மை
3. செரிமான கோளாறு
4. மற்றும் பல
 
சரிசெய்வது எப்படி:
 
* ஆப்பிள் மற்றும் கேரட் சாறு அருந்துவதால் தூக்கம் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.
* வெங்காய சாறு படுக்கும் முன்பு அருந்துவதால் தூக்கம் வரும்.
* தேனும், எலுமிச்சை சாறும் இரவு படுக்கும் முன்பு குடிப்பதால் தூக்கம் நன்றாக வரும்!
* வெதுவெதுப்பான நீரில் கால்பாதங்களை 10 நிமிடங்கள் வைத்துவிட்டு தூங்கச்செல்வது சாலச் சிறந்தது.
 
தூங்க செல்வதற்கு முன் முறையான நடைபயிற்சியும் நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும்!

அக்குபஞ்சர் மருத்துவர் த.நா.பரிமளச்செல்வி: