புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 ஜனவரி 2021 (10:09 IST)

அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் கொடுக்கும் கேரட் !!

கேரட்டில் அதிக அளவில் இருக்கும் கேரட்டின் என்கின்ற சத்து புற்றுநொயை தடுக்கும். கேரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. 
 
பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர்பான நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. தொடர்ந்து கேரட் சாறு  சாப்பிட்டால், வயிறு சம்மந்தமான  நோய்கள் குணமாகும். 
 
கேரட்டில் விட்டமின் ஏ, சி, டி, கே, பி -1 மற்றும் பி -6, இயற்கை சீனி ஆகியவை காரட்டில் உள்ளன. கேரட், ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பின் அளவைக்  குறைக்கிறது.  
 
கேரட்டை உட்கொள்வது வயிற்று நோய்கள், பித்தம், கபம் மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும். இது குடலில் சேமிக்கப்படும் மலத்தை விரைவாக  சுத்தப்படுத்துகிறது.
 
கேரட்டில்  புரோட்டீன், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்துக்கள் உள்ளன. அதைத் தவிர, கேரட்டின், தயாமின், ரிப்போபிலோவின் ஆகிய சத்துக்கள் உள்ளன.
 
கேரட் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. கேரட்  சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
 
பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்று  நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.