வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : ஞாயிறு, 5 ஜனவரி 2020 (15:42 IST)

முருங்கை கீரையின் அற்புத பலன்கள்...

முருங்கைக் காயுடன் மிளகு, ஓமம், பெருங்காயம் - 1 சிட்டிகை சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வர செரிமான கோளாறுகளான மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்புண் நீங்கும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
கண் நரம்புகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தூங்கச் செல்லும் முன் முருங்கைச் கீரைச்சாறும் தேனும் கலந்து கொடுத்தால் பார்வை  கூர்மை பெறும்.
 
முருங்க பட்டையை இடித்து சாறெடுத்து அதனுடன் குப்பைமேனி சாறு சேர்த்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி சொறி, சிரங்கு, கரப்பான் ஆகிய தோல் நோய்களில் மீது பூசிவர விரைவில் குணமாகும்.
 
குருங்கை இலைச் சாற்றுடன் தேனும் இளநீரும் சேர்த்துக் குடிப்பதால் இழந்த உடல் ஆரோக்கியமும் பலமும் திரும்பக் கிடைக்கும்.
 
நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தவுடன் முருங்கைக் கீரையோடு இரண்டு பல் பூண்டு, சிறிது மஞ்சள், உப்பு, மிளகு இவைகளை சேர்த்து  அரைத்து உள்ளுக்கு சிறிது கொடுப்பதுடன் கடிப்பட்ட இடத்தில் சிறிதளவு தடவி வர நஞ்சு முறியும். புண்ணும் விரைவில் ஆறும்.