வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 மார்ச் 2018 (19:11 IST)

இதயத்தை வலுவாக்க உதவும் பேரிக்காய்

இதயம் பலவீனமாக உள்ளவர்கள் தினமும் இரண்டு வேளை பேரிக்காய் சாப்பிடுவது இதயத்தை வலுவாக்க உதவும். 

 
பேரிக்காய் பல மருத்துவக்குணங்களை கொண்டது. இதில் உள்ள வைட்டமின் ஏ உடலுக்கு நல்ல சுண்ணாம்புச்சத்தையும், இரும்புச்சத்தையும் கிடைக்க உதவுகிறது.
 
கர்ப்பிணிகள் பேரிக்காயைச் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல திடமாக, ஆரோக்கியமாக இருக்கும். பால் கொடுக்கும் தாய்மார்கள் பேரிக்காய் அடிக்கடி சாப்பிட்டால் தேவையான பால் சுரக்கும்.
 
இதயம் பலவீனமாக உள்ளவர்கள் மற்றும் அதிக படபடப்பு உள்ளவர்கள் தினமும் இரண்டு வேளை பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப் பின்பு படுக்கைக்கு செல்லும் முன்பு சாப்பிட்டால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.