1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2023 (18:40 IST)

டெங்கு காய்ச்சலை ஆயுர்வேத மருந்துகளால் தடுக்க முடியுமா?

தமிழகத்தின் பல நகரங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் டெங்கு காய்ச்சலை ஆயுர்வேத மூலிகைகள் மூலம் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாகத்தான் டெங்கு காய்ச்சல் உருவாகிறது என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்டால் டெங்கு காய்ச்சல் வராது என்றும் கூறப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் தருவது துளசி என்றும் துளசி இலை கருப்பு மிளகு சேர்த்து கொதிக்க வைத்து  ஒரு டம்ளர் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து டெங்கு காய்ச்சலை தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் பப்பாளி இலைகளை நசுக்கி அதன் சாறு எடுத்து குடித்தால் டெங்கு காய்ச்சல் வராது என்றும் உடலில் ரத்த அணுக்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
 
மேலும் நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்தது என்பதால் நெல்லிக்காயை ரெகுலராக சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் டெங்கு காய்ச்சல் உட்பட பல நோய்கள் தவிர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran