எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) பிரச்சினைக்கு அக்குபங்க்சரில் தீர்வு
இன்று இளம் வயது பெண்களைக்கூட தாக்கக்கூடிய ஒரு பிரச்சினை தான் இந்த எண்டோமெட்ரியோசிஸ் எனும் இடமகல் கருப்பை அகப்படலம்! கருப்பையின் வெளிப்புறத்தில் வளரக்கூடிய எண்டோமெட்ரியல் திசு, கருப்பையின் வெளியில் எந்த இடத்திலும் இது வளரக்கூடியது இந்தப்பிரச்சினையால் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்ப்படுகிறது.
ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரஜெஸ்ட்ரோன் என்ற ஹாரோம்களின் அளவில் ஏற்படும் மாறுதல்களுக்கு ஏற்றவாறு இது வளர்ந்து வரும். பெண்களின் அடி வயிற்றில் முழுவதும் கூட இது பரவ வாய்ப்புள்ளது.
சிலருக்கு இது கருப்பைக்குள் நுழைந்து சிறு சிறு இரத்தக்கட்டிகளாகவும் மாறிவிடும். இதுவே நாளடைவில் ஒட்டுத்திசுக்களாக மாறி கரு இணைப்புக்குழாய், கருப்பை ஆகியவற்றை ஒன்றோடொன்று ஓட்டவைத்துவிடும்.
அறிகுறிகள்:
* மாதவிலக்கின்போது வலி
* உடலுறவின்போது வலி
* குழந்தையின்மை
* முட்டை வளர்ச்சியின்மை
* கருக்குழாய் இணைப்பு
மேலே கூறிய என அறிகுறி இல்லாமலும் கூட இந்த பிரச்சினை உடலில் இருக்கும்.
லேப்ராஸ்கோபி பரிசோதனை மூலமாகவே இந்த பிரச்சினையை கண்டறிய முடியும். ஆரம்பத்திலேயே கண்டுப்பிடித்துவிட்டால் மருந்து மாத்திரைகளால் குணப்படுத்திவிட முடியும். நாட்பட்ட பிரச்சினையாக வளர்ந்துவிட்ட நிலையில் இடமகல் கருப்பை அகப்படல சிக்கலுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் தான் தீர்வு காண்பார்கள். இதனால் இந்த சிக்கலுக்கு உள்ளானவர்கள் செயற்கை கருத்தரிப்பு மூலம் தான் குழந்தை பெறமுடியும்.
ஹார்மோன்களின் சமமற்ற தன்மையினால் ஏற்படக்கூடிய இந்த பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தான் தீர்வா என்று ஏங்கித்தவிக்கும் பெண்களுக்கு அக்குபங்க்சர் சிகிச்சை நல்ல தீர்வை தர ஆயத்தமாக உள்ளது. தேர்ச்சி பெற்ற அக்குபங்க்சர் சிகிச்சையாளரிடம் முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் அறுவை சிகிச்சையில் இருந்து இடமகல் கருப்பை அகப்படலம் எனும் கொடிய நோயிலிருந்து நம்மை காத்துக்கொண்டு குழந்தை பேற்றை அடையமுடியும் என்பது திண்ணம்.
கீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுப்பது எண்டோமெட்ரியோசிஸ் எனும் இடமகல் கருப்பை அகப்படலம் பிரச்சினைக்கு சிறந்த தீர்வை வழங்கும்.
அக்கு புள்ளிகள் : ST36, LV3, K3, Ren6, Ren4
-த.நா.பரிமளச்செல்வி,
அக்குபஞ்சர் மருத்துவர்