1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
  4. benfits of papaya taking a fruit everyday

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

papaya
இந்தியாவில் அதிகம் விளைவிக்கக் கூடிய ஒரு பழமாக பப்பாளி இருக்கிறது.. இதை ஏழைகளின் பழம் என்றும் கூறலாம். ஏனெனில் மிகவும் குறைவான விலையில் அதிக ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பழமாக பப்பாளி இருக்கிறது.

கடைவீதிக்கு சென்றாலே பழக்கடைகளில் பப்பாளி பழம் சுலபமாக கிடைக்கிறது.. ஆனால் பலருக்கும் பப்பாளியில் இருக்கும் நன்மைகள் பற்றிய தெரிவதில்லை.

சுவையான பப்பாளி நம் உடலுக்கு பல அற்புதமான நன்மைகளை தருகிறது.. வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

செரிமானத்தை சீராக்க உதவும்.. உணவு விரைவாக செரிமானமாக உதவுகிறது..

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.. சளி, இருமல் போன்ற நோய்களிலிருந்து உடலை பாதுகாக்க உதவும்..

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.. சருமத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவும்..

மலச்சிக்கலை குறைக்க உதவும்.. நார்ச்சத்து நிறைந்ததால் மலச்சிக்கலை தடுக்கும் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது..

காலை உணவுக்கு பிறகு பப்பாளி சாப்பிடுவது செரிமானத்திற்கு மிகவும் நல்லது..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..