வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2015 (05:16 IST)

மலேரியாவை ஒழிப்பதில் ஆப்பிரிக்கா முன்னேறவில்லை

மலேரியாவை ஒழிப்பதில் ஆப்பிரிக்கா முன்னேறவில்லை

மலேரியாவால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில், குறிப்பாக சஹாரா பாலைவனத்திற்கு தெற்கே உள்ள நாடுகளில், அந்த நோயை ஒழிக்கும் நடவடிக்கைகளில் குறைந்தளவான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் புதிய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

2000ஆம் ஆண்டிலிருந்து ஆப்பிரிக்காவில் விநியோகிக்கப்பட்ட நூறு கோடி கொசு வலைகளால் தான் தற்போது அங்குள்ள மக்கள் தொகையில் பாதிப்பேர் பாதுகாப்பாக உறங்க முடிவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் பல நாடுகளில் சுகாதார கட்டமைப்புகள் மோசமாக இருப்பது தான், முன்னேற்றத்துக்கு முக்கிய தடையாக இருப்பதாக அந்த அமைப்பு கூறுகின்றது.

15 ஆண்டுகளுக்கு முன்னர் மலேரியா ஒழிப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், உலக அளவில் மலேரியாவால் ஏற்பட்டுவந்த சுமார் 60 லட்சம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.