1 ஜி.பி.க்கு ரீசார்ஜ் செய்தால் 10 ஜி.பி. இலவசம்
ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின் மற்ற இணைப்புகள் அனைத்தும் மார்க்கெட்டில் தங்களை தக்கவைக்க கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. போட்டி போட்டிக்கொண்டு சலுகைகளை வாரிவழங்கி வருகின்றன.
இந்நிலையில் வோடபோன் தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஒரு ஜி.பி.க்கு ரீசார்ஜ் செய்தால் 9 ஜி.பி.இலவசமாக கிடைக்கும். அதாவது மொத்தம் 10 ஜி.பி. பயனாளர்களுக்கு கிடைக்கும். இந்த இலவச டேட்டா திட்டம் 4 ஜி, 3 ஜி இரண்டுக்கும் இந்த ஆஃபர் அடங்கும்.
தமிழகத்தில் இந்த சலுகை புதிய 4ஜி மொபைல் ஹேண்ட்செட்டுகளுக்கும் மட்டுமே பொருந்தும். இந்த இலவச 9 ஜி.பி.யை இரவு 12 மணி முதல் ஆறு மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.