விஜய் மல்லையாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள இந்திய தொழில் வர்த்தக சபை


Suresh| Last Updated: திங்கள், 11 ஏப்ரல் 2016 (13:24 IST)
இந்திய தொழில் வர்த்தக சபையாகிய அசோசெம் விஜய் மல்லையா உள்நோக்கத்துடன் ஏமாற்றவில்லை என்றும் கடனை கட்டவேண்டும் என்றுதான் அவர் கருதுவதாகவும் கூறியுள்ளது.

 

 
இது குறித்து இந்திய தொழில் வர்த்தக சபை (அசோசெம்) செகரட்டரி ஜெனரல் டி.எஸ்.ராவத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறுவது, கடன் வாங்கிய நபர் உள்நோக்கத்துடனும், வேண்டுமென்றே திட்டமிட்டு மோசடி செய்வதாகும்.
 
இதைத்தான் இந்த வரிசையில் சேர்க்க வேண்டும். ஆனால், கடன் வாங்கிய நபர் திருப்பி செலுத்த நினைக்கிறார் என்றால் அதை உள்நோக்கத்துடன் மோசடி செய்ததாக கருதக்கூடாது. 
 
விஜய் மல்லையாவைப் பொறுத்தவரை, வங்கிகளில் வாங்கிய கடனில் ரூ 4,000 கோடியை திருப்பி செலுத்துவதாக றியுள்ளார்.
 
இதிலிருந்தே கடனை செலுத்த வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருக்கிறது. இதை வங்கிகளும் எண்ணிப்பார்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
விஜய் மல்லையா எஸ்பிஐ உள்யிட்ட பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ 9 ஆயிரம் கோடி ரூபாயை கடனாப்பெற்றுள்ளார். தற்போது அவர் நாட்டிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :