ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2016 (17:08 IST)

ஜியோவுடன் போட்டிக்கு தயாரான டுவிட்டர்?

டுவிட்டரில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிக உள்ள நிலையில், உடனுக்குடன் போட்டி குறித்து டுவிட் செய்வதும் வழக்கம். இதனால் ஐ.பி.எல். போட்டிகளை டுவுட்டரில் ஒளிப்பரப்பு செய்ய டிஜிட்டல் உரிமம் பெற டுவிட்டர் நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது.


 

 
ஐ.பி.எல். போட்டிகளை ஒளிப்பரப்பு செய்யும் உரிமம் ஏற்கனவே சோனி, ஜீ, இ.எஸ்.பி.என், ரிலையண்ஸ் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள்  வாங்கியுள்ள நிலையில் தற்போது டுவிட்டர் நிறுவனமும் ஒளிப்பரப்புகாக டிஜிட்டல் உரிமம் பெற களத்தில் இறங்கியுள்ளது.
 
இதுகுறித்து டுவிட்டர் நிறுவனத்தின் விளையாட்டு பிரிவு பங்காளர் அனீஸ் மதானி கூறியதாவது:-
 
டுவிட்டரில் ஏற்கனவே கிரிக்கெட் ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். அதோடு கிரிக்கெட் போட்டி குறித்த செய்திகளை அவ்வப்போது தொடர்ந்து டுவிட் செய்து வருவது வழக்கம். இந்நிலையில் ஒளிப்பரப்பு டிஜிட்டல் உரிமம் பெற்றுவிடால், ஐ.பி.எல். போட்டிகளை டுவிட்டரில் நேரலையாக காணலாம் என்று தெரிவித்தார்.
 
மேலும் தற்போது கால்பந்து போடிகளை tnf.twitter.com என்ற தளத்தில் நேரலையாக காணலாம்.