வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (17:59 IST)

துரத்தி அடிக்கும் ஜியோ: டிராய் அதிரடி அறிக்கை

இந்தியாவின் வேகமான 4ஜி நெட்விர்க் சேவை ஜியோ தான் என டிராய் தெரிவித்துள்ளது.


 


 
ஜியோ அறிமுகமான பின்னர் ஏர்டெல் நிறுவனம், தங்கள் நிறுவனம் தான் அதிவேகமான 4ஜி சேவை வழங்குகிறது என தெரிவித்தது. அதற்கு ஜியோ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஜியோவின் அதிரடி சலுகை மற்றும் இலவச சேவையை முறியடிக்க மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், ஜியோ தான் இந்தியாவிலே அதிவேகமான 4ஜி சேவை வழங்குகிறது என தெரிவித்துள்ளது. இதையடுத்து தங்கள் நிறுவனம்தான் அதிவேகமான 4ஜி சேவை வழங்குகிறோம் என பெருமை புகழ் பாடிய ஏர்டெல் நிறுவனம் தற்போது பெரும் சோகத்தில் உள்ளது.