1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (12:29 IST)

நேற்று படுவீழ்ச்சி அடைந்த பங்குச்சந்தையின் இன்றைய நிலை என்ன?

share
நேற்றைய மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதை பார்த்தோம். ஆனால் நேற்றைய சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை ஓரளவு உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று காலை தொடங்கிய நிலையில் தற்போது 90 புள்ளிகள் அதிகரித்து 71 ஆயிரத்து 515 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 28 புள்ளிகள் உயர்ந்து 21 ஆயிரத்து 745 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை உயர்வாக காணப்படுவது முதலீட்டாளர்களுக்கு ஆர்வமாக இருக்கும் நிலையில் தேர்தல் நெருங்க இன்னும் பங்குச்சந்தை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்றும் இன்னும் ஒரு சில மாதத்தில் சென்செக்ஸ் 80 ஆயிரம் தொட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது 
 
இன்றைய பங்கு சந்தையில் பேங்க் பீஸ், சிப்லா, கோல்ட் பீஸ் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஏபிசி கேப்பிட்டல், ஐடி பீஸ், கரூர் வைசியா வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
 
 
Edited by Siva