செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (22:10 IST)

இரண்டே நாளில் ரூ.6100 கோடி லாபம்: பங்குச்சந்தையில் நடந்த அதிசயம்

பங்குச்சந்தையில் இதுவரை லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்த பலரைத்தான் பார்த்திருக்கின்றோம். ஆனால் இரண்டே நாட்களில் பங்குச்சந்தையில் ரூ.6100 கோடியை ஒருவர் சம்பாதித்துள்ளார் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆனால் அதுதான் உண்மை



 


அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் என்பவர்தான் இந்த அதிர்ஷ்டசாலி. இவருக்கு சொந்தமான அவென்யு நிறுவனம், அதன் பங்கு வெளியீடை சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் வர்த்தகப் பணிகள் சிறப்பாக உள்ளதாகக் கூறப்பட்டதை அடுத்து  இந்த நிறுவனத்தின் பங்குகளை எதிர்பார்த்ததைவிட இரண்டரை மடங்கு முதலீட்டாளர்கள் வாங்கினர். மிக அதிக வரவேற்பு காரணமாக முதல் நாளில் ரூ.299 என்ற அடிப்படை விலைக்கு விற்பனையான இந்த நிறுவனத்தின் பங்கு இரண்டே நாட்களில் பங்கு ஒன்றின் விலை ரூ.750.50 ஆக உயர்ந்தது.

இதனால் இந்த நிறுவனத்தின் 82.2% பங்குகளை வைத்திருந்த ராதாகிருஷ்ணனின் குடும்பத்தின் சொத்து மதிப்பு 2 நாளிலேயே, ரூ.6100 கோடி மதிப்புடையதாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.